"பொன்னியின் செல்வன்-2" படத்தின் ஆழி மழைக்கண்ணா பாடல் வீடியோவை வெளியிட்ட படக்குழு

#Cinema #TamilCinema #Movies
Mani
2 years ago
"பொன்னியின் செல்வன்-2" படத்தின் ஆழி மழைக்கண்ணா பாடல் வீடியோவை வெளியிட்ட படக்குழு

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் மற்றும் பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன்-2. ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் பாகத்தின் வெற்றியைப் போலவே இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற "ஆழி மழைக்கண்ணா" வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஹரிணியின் குரலில் வெளிவந்துள்ள இந்தப் பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!